Sunday, November 30, 2014

111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்

111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்
111 பழங்களின் பெயர்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. சில பழங்களுக்கு அதன் தமிழ்ப் பெயர் தெரியாதபடியால் ஆங்கிலப் பெயர்கள் பாவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பட்டியலில் இடம்பெறாத ஈச்சம்பழம், இலந்தைப்பழம், பாலைப்பழம் போன்ற பல பழங்களிற்கு அவற்றிற்கு ஈடான ஆங்கிலப் பெயர்கள் தெரியாதபடியால் இணைக்கப்படவில்லை. தெரிஞ்சா சொல்லுங்க‌ப்பா..
‪#‎A‬
Ambarella ------ அம்பிரலங்காய்
Apple ------ அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
Apricot ------ சருக்கரை பாதாமி
Annona ------ சீத்தாப்பழம்
Annona muricata ------ முற்சீத்தாப்பழம்
Avocado ------ வெண்ணைப்பழம்
Banana ------ வாழைப்பழம்
Batoko Plum ------ 'லொவிப்'பழம்
Bell Fruit ------ பஞ்சலிப்பழம், சம்பு
Bilberry ------ அவுரிநெல்லி
Bitter Watermelon ------ கெச்சி
Blackberry ------ நாகப்பழம்
Black currant ------ கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
Blueberry ------ அவுரிநெல்லி
Breadfruit ------ சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா
Butter fruit ------ ஆனைக்கொய்யா
Cantaloupe ------ மஞ்சள் முலாம்பழம்
Cashew Fruit ------ முந்திரிப்பழம்
Carambola ------ விளிம்பிப்பழம், தமரத்தங்காய்
Cherry ------ சேலா(ப்பழம்)
Cherimoya ------ சீத்தாப்பழம்
Chickoo ------ சீமையிலுப்பை
Citron ------ கடாரநாரத்தை
Citrus Aurantifolia ------ நாரத்தை
Citrus Aurantium ------ கிச்சலிப்பழம்
Citrus medica ------ கடரநாரத்தை
Citrus sinensis ------ சாத்துக்கொடி
Citrus reticulata ------ கமலாப்பழம்
Clementine ------ நாரந்தை
Cocoa fruit ------ கோக்கோ பழம்
Coccinea cordifolia ------ கொவ்வைப்பழம்
Cranberry ------ குருதிநெல்லி
Cucumus trigonus ------ கெச்சி
Cucumber ------ வெள்ளரிப்பழம்
Custard apple, sugar apple(Annona Squanosa), SWEET SOP ------ அன்னமுன்னா பழம்
Damson ------ ஒரு வித நாவல் நிறப்பழம்
Date fruit ------ பேரீச்சம் பழம்
Devilfig ------ பேயத்தி
Dragon fruit ------ தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் (தறுகண், அகி, விருத்திரம் - dragon)
Duku ------ 'டுக்கு'
Durian ------ முள்நாரிப்பழம்,
Eugenia Rubicunda ------ சிறுநாவல், சிறு நாவற்பழம்
Emblica ------ நெல்லி
Feijoi / Pinealle guava ------ புளிக்கொய்யா
Fig ------ அத்திப்பழம்
G
Gooseberry ------ நெல்லிக்காய்
Grape ------ கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
Guava ------ கொய்யாப்பழம்
Hanepoot ------ அரபுக் கொடிமுந்திரி
Harfarowrie ------ அரைநெல்லி
Honeydew melon ------ தேன் முழாம்பழம்
Huckle berry ------ (ஒரு வித) நெல்லி
‪#‎I‬.......
Jack fruit ------ பலாப்பழம்
jambu fruit ------ நாவல்பழம்
Jamun fruit ------ நாகப்பழம்
Jumbu fruit ------ சம்புப் பழம்
‪#‎K‬
Kiwi fruit ------ பசலிப்பழம்
Kumquat ------ (பாலைப்பழம் போன்ற ஒரு பழம்)
Kundang ------ மஞ்சல் நிற சிறிய பழம்
‪#‎L‬
Lychee ------ 'லைச்சி'
Lansium ------ அத்திப்பழம்
Lemon ------ வர்க்கப்பழம், எலுமிச்சை
Lime ------ தேசிக்காய்
Loganberry ------ 'லோகன் பெறி'
Longan ------ கடுகுடாப் பழம், முதளிப்பழம்
Louvi fruit ------ 'லொவிப்பழம்'
‪#‎M‬
Mandarin ------ 'மண்டரின்' நாரந்தை
Mango ------ மாம்பழம்
Mangosteen ------ 'மெங்கூஸ்' பழம்
Melon ------ வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம்
Mulberry ------ முசுக்கட்டைப் பழம்
Muscat Grape ------ அரபுக் கொடிமுந்திரி
Morus macroura ------ மசுக்குட்டிப்பழம்
‪#‎N‬..........
‪#‎O‬
Orange (bitter) ------ நாரந்தை , தோடைப்பழம், நரந்தம்பழம்
Orange (sweet) ------ சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை
Orange (Loose Jacket) ------ கமலாப்பழம்
‪#‎P‬
Pair ------ பேரிக்காய்
Papaya ------ பப்பாளிப் பழம்
Passionfruit ------ கொடித்தோடைப்பழம்
Peach ------ குழிப்பேரி
Persimmon ------ சீமைப் பனிச்சை
Phyllanthus Distichus ------ அரைநெல்லி
Plum ------ 'ஆல்பக்கோடா'
Pomelo ------ பம்பரமாசு
Prune ------ உலர்த்தியப் பழம்
Palm fruit ------ பனம் பழம்
Passion fruit ------ கொடித்தோடை
Pear ------ பேரி
Pine apple ------ 'அன்னாசி'ப் பழம்
Pomegranate ------ மாதுளம் பழம், மாதுளை
Pulasan ------ (ஒரு வகை)'றம்புட்டான்'
‪#‎Quince‬ ------ சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
‪#‎R‬
Raisin ------ உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
Rasberry ------ புற்றுப்பழம்
Red banana ------ செவ்வாழைப்பழம்
Red currant ------ செந்திராட்சை, செங்கொடிமுந்திரி
Rambutan ------ 'றம்புட்டான்'
‪#‎S‬
Sapodilla(zapota) ------ சீமையிலுப்பை
Star fruit ------ விளிம்பிப்பழம்
Satsuma ------ நாரத்தை
Sour sop/ Guanabana ------ சீத்தாப்பழம்
Strawberry ------ செம்புற்றுப்பழம்
Syzygium ------ சம்புப்பழம், சம்புநாவல்
‪#‎T‬
Tamarillo ------ குறுந்தக்காளி
Tangerine ------ தேனரந்தம்பழம், தேன் நாரந்தை
Tamarind ------ புளியம்பழம்
Tomato ------ தக்காளிப்பழம்
‪#‎U‬
Ugli Fruit ------ முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் (உக்குளி - ugly)
‪#‎V‬.............
‪#‎W‬
Watermelon ------ வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தருபூசணி
Wood Apple ------ விளாம்பழம்
Wax jambu ------ நீர்குமளிப்பழம்
--------------------------------------------------------------------------------------
தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்
http://tunein.com/radio/Puradsi-Fm-s172414/

Tuesday, November 25, 2014

பெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகள் !!!

ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே வித் தியாசம் இவர்களி ன் பாலியல் மற்றும் இனவிருத் திக்கான உடலுறுப்புகள் வெவேறு விதமாக அமைந்துள்ளதுதான். ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குழந்தையை உரு வா க்க இந்த உறுப்புகள் மூலம்தான் சாத்தியம் ஆகிறது. பெண்க ளின் பல ஆரோக்கியப் பிரச்சினைகள் இந்த உறுப்புகளை பாதிப்பதாய் அமைந்துள்ளது. பாலியலுடன் சம்பந்தப்பட்ட நம் உடலுறுப்புகளை குறித்து பேசுவது சற்று கடினமான காரியம்தான்.
குறிப்பாக நீங்கள் வெட்கப்படுபவராக இருந்தால் இதை குறித்து விவாதிப்பது ரொம்பவே கஷ்டம். உடலின் பல்வேறு இனப்பெருக்க உறுப் புகளின் பெயர்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் விவாதிப்பது கஷ்டம்தான். இன விருத்திக்கான உடலுறுப்பு கள் பொதுவாகவே அந்தரங்கமான ஒன்றாகவே எங்கும் கருதப்படு கிறது. நம் உடல் எப்படி இயங்குகிறது என்று நமக்கு தெரிந்தால் நம் உடலை நம்மால் மேலும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும்.
பிரச்சினைகள் வரும்பொழுது அதற்கான காரணங் ளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அந் த அடிப்படையில் பிர ச்சினையின் காரணத் தை அறிந்து, எது சிற ந்த சிகிச்சை என முடி வெடுக்க முடியும். நம் மைபற்றி மேலும் மேலும் அறியும் பொ ழுது மற்றவர்களின் அறிவுரை (நல்ல தோ, கெட்டதோ எது வாய் இருந்தாலும்)யையும் மீறி நம்மா ல் சொந்த முடிவு எடுக்க முடியும். ஒரு பெண்ணுக்கு பெண் என்பதற்கு அடையாளமான இனவிருத்தி உறுப்புகள் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் அமைந் துள்ளன.
இவை பிறப்புறுப்புகள் அ ல்லது இனவிருத்திக்கான உறுப்புக ள் என அழைக்கப்படுகின்றன. வெ ளிப்பாகத்தை உல்வா என்றழைப்ப ர். இந்த பாகம் முழுவதையும் சில ர் யோனி என்றழைப்பதுண்டு. ஆ னால் யோனி என்பது உல்வாவின் திறப்பிலிருந்து உள்ளே க ர்ப்பப்பை வரை போகின்ற வழி யாகும். யோனியை சிலநேரங்களில் பிறப்பு வழி என்றும் அழைப்பது ண்டு. கீழேஉள்ள வரைபடத்தில் உல்வா விளக்கப்பட்டுள்ள து. அதன் பல்வேறு பாகங் களின் பெயர்கள் தரப்பட் டுள்ளன. ஆனால், பெண்ணுக்கு பெண் உடல் வித்தியாசப்ப டும். உறுப்புகளின் அளவு, வடிவம் நிறம்கூட வித்தியாசப்படும்.
குறிப்பாக வெளி மற்றும் உள் மடிப்புகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும். மார்பகங்கள் மார்பகங்கள் எல்லா வடிவி லும் எல்லா அளவிலும் கா ணப்படும். ஒரு பெண்ணுக்கு 10 முதல் 15 வயது ஆகும் போது இது வளர ஆரம்பிக்கி றது. அதாவது சிறுமியாயிரு ந்து பூப்படையும் பருவத்தில் இது வளர ஆரம்பிக்கிறது. க ருத்தரித்த பின் குழந்தைக்கான பால் இங்குதான் உற்பத் தியாகிறது. உடலுறவின் போது இதைத் தொட்டால் பெண் ணின் யோனிக் குழாய் ஈரமாகி பெண்ணை உடலுறவுக்கு தயார்படுத்துகிறது. மார்பகத்தின் உள்பாகம் சுரப்பிகள் : குழந்தைக்கான பாலை உற்பத்தி செய்கிறது. சுரப்பி குழாய்கள் : இவை பாலை மார்புக் காம்புக்கு கொண்டு செல்கிறது. திறவு (Sinuses) : குழந்தை பால் குடிக்கு ம்வரை பால் இங்குதான் சேமித்து வைக்கப்படுகி றது.
மார்புக்காம்பு : இதன் வழியே பால் வெ ளிவருகிறது. சில நேரம் இது விரை த்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். சில நேரம் இது தட்டையாக இருக்கும்.
ஏரியோலா (Areola) : மார்புக்காம்பை சுற்றிய கருத்த மேடான பகுதி. கருவட்டத்தில் உ ள்ளமேடுகள் எண்ணெய் பசை யைஉற்பத்தி செய்கின்றன. அவை மார்புக்காம்பை சுத்தமாகவும் மிரு து வாகவும் வைத்திருக்க உதவுகிறது. பருவமாற்றங்களும் ஹார்மோன்களும் ஹார்மோன்கள் உடலில் சுரக்கும் விஷேச வேதிப்பொருட்க ளாகும். இவை உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுப்படுத்துகி றது. ஒரு பெண்ணுக்கு முதல் மாத விடாய்க்கு சற்று முன்பு எஸ்ட்ரோ ஜன் மற்றும் புரோஜெஸ் டெரோன் என்ற இரு ஹார்மோன்கள் சுரக்கின் றன.
இவை இரண்டும் பெண்ணுக் கே உரிய இரு முக்கிய ஹார்மோன் கள். இந்த இரு ஹார்மோன்களால் தான் பெண் பருவமடை கிறாள். பருவமடைந்தபின் மாதவிடாய் நிற்கும்வரை, ஹார்மோன் கள் பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார்படுத்துகிறது. இந் த ஹார்மோன்களின் ஆணைப்படிதான் ஒவ்வொ ரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியி டுகின்றன.
ஒரு பெண் கருத் தரிக்க இந்த ஹார்மோன்க ள் முக்கிய காரணமாய் வி ளங்குகின்றன. பல குடும்ப கட்டுப்பாட்டு வழிமுறைக ள் இந்த ஹார்மோன்களை கட்டுப்படுத்துவது மூலம் நடக்கிறது. கருத்தரித்த பின்பும், தாய்பால் ஊட்டும் போதும் கூட ஹார்மோன்கள் பல மாற்றத்தை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் கர்ப்பமாயிருக்கும் போது மாதவிடாய் வருவ தில்லை. குழந்தை பிறந்த உடனே பால் சுரக்க வைப் பதும் இந்த ஹார்மோன்க ள்தான். ஒருபெண் இனவிருத்தி க் கான கட்டத்தை கடக்கும் பொழுது, இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது.
அவள் உடலில் கருத்தரித்தலுக்கானநிலை முடிந்து போகும். மாதவிடாய் முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர்தான் “மாதவிடாய் நின் று விடுதல்” (Menopause) அதைத் தொடர்ந்து பெண் ணின் உட லில் சுரக்கும் ஹார் மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவ ளின் மனநிலை, காம உண ர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலு ம்பின் சக்தி ஆகிய வற்றிலும் மாற்றம் ஏற்படும். மாதவிடாய் ஒரு பெண் இனவிருத்திக்கான காலக்கட்டத்தில் இருக்கும் பொழுது, ஒவ்வொரு மாதமும் சில நாட் கள் அவளின் கர்ப்பப் பையிலிருந்து இரத்தம் யோனிக்குழாய் வழியாக உடலை விட்டு வெளியேறு கிறது. இதற்கு பெயர்தான் மாதவிடாய். மாதவிடாய் நடப்பது உடல் நல்ல நிலையில் இருப்பதற்கு அடையாளம்.
இதன் மூலம் உடல் கருத்தரித்தலுக்கு த யாராகிறது. இந்த மாதவிடாயை பல பெண்கள், தங்கள் வாழ்வின் ஒரு அம்சமாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பலநேரங்க ளில் அவர்களுக்கு இது ஏன் நிகழ்கிறது? இந்த மாற்றம் ஏன் ஏற் படுகிறது என்றெ ல்லாம் தெரிவதில்லை. மாதாந்திர சுற்று (மாத விடாய் சுற்று) மாதாந்திரச் சுற்று ஒவ்வொரு பெண்ணுக்கும் வித்தியாசப்ப டும். இரத்தப்போக்கு வரும் முதல் நாள் இது தொடங்குகிற து.பெரும்பாலான பெண்களு க்கு 28 நாட்களுக்கு ஒரு முறை இந்த ரத்தப்போக்கு ஏற்படும். சில பெண்களுக்கு 20 நாட்க ளுக்கு ஒரு முறை கூட இது ஏற்படும்.
சில பெ ண்களுக்கோ 45 நாட்களுக் கு ஒருமுறைதான் இது நிக ழும். மாதவிடாய் சுற்றின் போது, ஒவரியில் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெ ஸ் டெரான் ஹார்மோன்களின் அளவு மாறிக்கொ ண்டேயி ருக்கும். மாதச்சுற்றின் முதல்பாதியில் பெரும் பா லும் சினை ப்பையில் ஈஸ்ட்ரோஜன்தான் சுரக் கும். இதனால் கருப்பை யின் உட்சுவரில் ரத்தம் மற்றும் திசுக்களாலான மிருதுவான படலம் உரு வாகிறது. ஒரு வேளை பெண் கருத்தரித்தால் உருவாகும் குழந்தை இந்த மிருதுவா ன கூட்டில் சுகமாக இருக்கும். மாதச்சுற்றின் மத்தியில், கருப்பையின் மிருதுவான உட்சுவர் தயார் ஆன உடன், ஏதாவது ஒரு சினைப்பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறு ம்.
இம்முட்டைஃபெலோப்பி யன் குழாய் வழியாக கருப் பையை அடையும். அப் போது பெண் கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருப் பாள். அப்போது பெண் உட லுறவுக் கொண்டாள், ஆ ணின் உயிரணு முட்டை யோடு சேர வாய் ப்புண்டு. இதற்கு கருத்தரித்தல் என ப்பெயர்.
அது கர்ப்ப காலத் தின் தொடக்கமும் ஆகும். மாதச்சுற்றின் இரண்டாம் பாக த்தில், அதாவது அவளது அடுத்த மாதவிடாய் தொடங் கும் வரை அவள் உடல் புரோஜெஸ்டொரோன் ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹர்மோ னும் கருத்தரிதலுக்கு ஏதுவா க கருப்பையின் மிருதுவான உட்சுவரை உருவாக்குகிறது. பெரும்பாலான மாதங்களில் பெண்ணின் முட்டை கருத்த ரிக்காது. எனவே கருப்பையி ன் சுவர்ப்படலத்துக்கு தே வையிருக்காது. சினைப்பைகளும், ஹார்மோன்கள் சுரப்ப தை நிறுத்தி விடும். இதன் விளைவாய் சுவர்படலமானது உடைந்து சிதையும். உடைந்து சிதைந்த இரத்தக்குழம்பு கரு ப்பையிலிருந்து மாதவிடாயின்போது, உடலை விட்டு வெளியேறும்.
இதனோடு கூடவே முட்டையும் வெளியேறு ம். இது புதியமாதாந்திர சுற் றின் தொடக்கமாகும். மாத விடாய் நின்ற உடன் சினைப் பைகள் சுவர்ப்படலம் உரு வாகும். பெண்களுக்கு வய தாகி, மாதவிடாய் முற்றிலு மாக நிற்பதற்கு முன்பு இரத் தப்போக்கு அடிக்கடி ஏற்பட லாம். இரத்தப்போக்கின் அள வும், இளமையாய் இருந்தபோது உண்டானதைவிட அதிக மாக இருக்கலாம். மாதவிடாய் நிற்கப் போகும் காலத்தில் (மெனோபாஸை நெருங்கும் சமயத்தில்), மாதவிடாய் சில மாதங்கள் நின்று மீண்டும் தொடங்கலாம். பெண்ணின் இனவிருத்தி உறுப்பின் வெளிப்பாகங்கள்
உல்வா : உங்கள் இரு தொடைகளு க்கு இடையே காணப்படும் இனவிருத்தி உறுப்புகள் வெளிமடிப்புகள் : தடித்த சதைப் பகுதி கால்கள் ஒன்றாக இருக்கும்பொழுது இவை மூடிக்கொள் ளும். இது உள் பாகங்களை பாதுகாக் கிறது.
உள்மடிப்புகள் : இது மிருதுவான தோல் பகுதி. இதில் முடி இருக் காது. தொ ட்ட உடனே உணர்ச்சி வரும். உடலு றவின் போது இப்பாகம் விரிவடையும். இதன் நிறம் கருமையாகும்.
யோனிக் குழாயின் திறப்பு : யோனியின் திறப்பு வாயில்
ஹைமன் (Hymen) : யோனியின் திறப்பில் உள்ளே அமைந்துள்ள மெல்லிய சதைப் பகுதி. கடின வேலை விளையா ட்டு போன்ற நடவடிக்கைகளின் போது இத்தோல் பகுதி விரிவ டையும் அல்லது கிழிபடலாம். அப்போது லேசாக இரத்தம் வரும். முதன்மு றையாக உடலுறவி ன் போதும் இது கிழிபடலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஹைமன் வித்தியாசப்படும். சில பெண்களுக்கு ஹைமன் னே இருக்காது.
மோன்ஸ் (Mons) : முடிகள் அடர்ந்த, உல்வா வின் தடித்த மேல் பகுதி. கிளிட்டோரிஸ் : மலர்மொட்டு போன்று சிறு பாகம். உல்வாவின் பாகங்க ளிலேயே மிகுந்த உணர்ச்சி தரக்கூடியது. இதையும் இதைச் சுற்றியு ள்ள பகுதியையும் தேய்த்தால் பெண்ணுக்கு பாலிய ல் வேட் கை அதிகமாகி உச்சக் கட்டத்தை அடைவாள்.
சிறுநீர்த்துவாரம் : சிறுநீர் குழாயின் வெளித்திறவு வா யில். சிறுநீர்ப் பையில் சேமிக்கப்ப ட்டுள்ள சிறுநீர் இக்குழாய் வழியே தான் உள்ளிருந்து வெளியே வருகி றது.
ஆசனவாய் (Anus) : குடல்வாய் திறப்பு, கழிவு (மலம்) இதன் வழியாக வெளியே றும் பெண்ணின் இனவிருத்தி உறுப்புகளின் உட்பாகங்கள்
சினைப்பை: ஒவ்வொரு மாதமும் சினைப்பையிலிருந்து ஒரு முட்டை பெலோப்பியன் குழாய்க்கு அனுப்பப்படுகிறது. ஒரு ஆணின் விந்தணு இதோடு இ ணையும் பொழுது அது குழந்தையாக உருப்பெற துவங்குகிறது. ஒரு பெ ண்ணுக்கு இரு சினைப் பைகள் இருக்கும் கருப் பையின் இரு புறமும் ஒவ்வொன்றும் இருக்கு ம். ஒவ்வொரு சினைப் பையும் ஒரு திராட்சைப்பழ அளவில் இருக்கும்.
கர்ப்பப்பை வாய் : கருப்பையின் வாயைத் தன் கர்ப்பப்பைவாய் என சொல் கிறோம். கருப்பையின் இத்திறப்பு யோனிக்குள் செல்கிறது. ஆணின் உயிரணு கர்ப்பப்பைக் குள் கர்ப்பப்பை வாயில் உள்ள சிறுதுவாரம் வழி யே உள்ளே நுழைகிறது. அதே நேரத்தில் ஆண் குறி போன்ற மற்றவை கருப்பையில் நுழைய முடியாதபடி இதுதடுக்கிறது. குழந் தைப் பிறப்பின்போது, இது திறந்து குழந்தை வெளியே வர உதவுகிறது.
ஃபெலோப்பியன் குழாய்கள் : இக்குழாய்கள் சினைப்பையையும் கர்ப்பப்பையையும் இணைக்கிற து. சினைப்பை ஒரு முட்டையை வெளியிடும் போது, அம்முட்டை இக்குழாயில் பயணம் செய்து கரு ப்பை யை அடைகிறது.
கர்ப்பப்பை : உள்ளே வெற்றிடத் தைக் கொண்ட தசையாலான பகுதி மாத விடாயின் போது இங்கிருந்து தான் இரத்தம் வெளியேறு கிறது. கருத்தரித்த பின் குழந்தை இங்குதான் வளர்கிறது.
யோனிக்குழாய் அல்லது பிறப்புவழி: உல்வா (Vulva)விலிருந்து கர்ப்பப்பை க்கு செல்லும் பாதை தான் யோனிக் குழாய். இதன் தோல் பகுதி விஷேச மானது. உடலுறவின் போதும் குழந் தைப் பிறப்பின்போது இத்தோல் பகுதி சுலபமாக விரிவடை கிறது. இதிலிருந்து வெளிப்படும் திரவம் அல்லது ஈரம் யோ னிக்குழாயை சுத்தமாக வைத்துக் கொள்ள வும், கிருமி கள் தாக்காமலும் பாதுகாக்கிற து. பெண்களின் பாலியல் பிரச்சனைகள் வளர்கின்ற பருவத்தில் பெரும்பாலான பெ ண்களுக்கு காதல் மற்றும் காம உணர்வுக ள் வரத்தான் செய்யும். தாங்கள் யாரையா வது தொடவேண்டும் அல்லது யாராவது தங்களை தொடவேண்டும் என்று அவர்கள் இச்சையுடன் நி னை ப்பது சாதாரண விஷயம்தான்.
பெண்கள் உடலுறவில் ஈடு பட பல காரணங்கள் உண் டு. சிலர் குழந்தைவேண்டி உடலுறவில் ஈடுபடுகிறார் கள். சில ருக்கு உடலுறவு சந்தோஷம் அளிப்பதாய் உள்ளது. சிலருக்கு அது தே வைப்படுகிறது என்பதனா ல் உடலுறவில் ஈடுபடுகி றார்கள். சிலர், அதில் விரு ப்பம் உண்டோ, இல்லையோ, மனைவி என்ற அடிப்படையி ல், கடமைபோல் அதில் ஈடுபடுகிறார்கள். சிலர்பணத்திற்கா க அல்லது வாழ்க்கையில் உயிர் வாழ் வதற்கு தேவையான உணவு அல்லது தனது குழந்தைகளுக்கு உடைகள் வா ங்குவதற்காக அல்லது தங்க இடம் வே ண்டி கட்டாயப்படுத்தப்பட்டு அதில் ஈடு படுத்தப் படுகிறார்கள்.
மற்ற பெண்கள் தன்னுடைய துணைவ ன் தன்னை அதிகம் நேசிக்கவேண்டும் என்பதற்காக உடலுற வில் ஈடுபடுகிறார்கள். சில நேரங்களில், பெண்ணின் நண்ப னோ அல்லது காதலனோ, பெண் தயாராக இல்லாத போது கூட அவனுடன் உடலுறவு கொள்ளவேண் டும் என வலியுறுத்தி அவ ளை ஏற்றுக்கொள்ளச் செய் கிறான். தான் விரும்பாத பொழுது, எந்த ஒரு பெண்ணும் உட லுறவின் ஈடுபடக்கூடாது. தான் அதற்கு தயார் என்று பெண் ணாகிய நீங்கள் முடிவு செய்த பின்னரே அதில் ஈடுபட வேண்டும். உடலுறவு என்பது, அதில் ஈடுபடும் இருவருக்கு மே மகிழ்ச்சி தரக்கூடிய து.
ஆனால் அதில் பய மோ, வெட்கமோ இருக் கும் பட்சத்தில் அந்த மகி ழ்ச்சி கிடைப்பது கடின ம். உடலுறவுக்கு நீங்கள் தயாரானவுடன், கருத்த ரித்தல் மற்றும் பால்வி னை நோய்களி லிருந்து உங்களை எப்போதும் பாதுகாத்துக் கொள்ள தயாராக இரு க்க வேண்டும். காதலனோடு உடலுறவு வைத்துக் கொள்ள நிர்பந் தம் உலகம் முழுவதும், பல பெண்களும் இளம் பெண் களும் விருப்பமில்லாமல் உடலுறவில் ஈடுபட நிர்பந் திக்கப்படுகிறார்கள். பெரு ம்பாலும் காதலர்கள் என் று சொல்லிக் கொள்ளும் அவர்களின் ஆண் நண்பர்களே இவ்வாறு நிர்ப்பந்திக்கிறார்கள்.
சில இடங்களில் இதை ‘காதலனின் பலாத் காரம்’ (Date rape) என்றழைக்கின்றனர். இந்த நிர்ப்பந்தம் உட ல் ரீதியானது மட்டும ல்ல. உணர்வுகளாலு ம், வார்த்தைகளாலு ம் கூட அவர்கள் நிர்ப் பந்திப்பார்கள். விருப் பமில்லாமல் யாரையும், யாரும் பாலுறவுக்கு நிர்ப்பந்திக்கக் கூடாது. உங்கள் குடும்ப உறுப்பினர் யாராவது உங்களோடு உடலுறவு வைத்துக் கொ ள்ள முயற்சித்தால் (முறைக் கெட்ட உறவு) நீங்கள் விரும்பவில்லையெனில் உங் கள் விருப்பத்திற்கு மாறாய், எவ்வளவு நெருக்கமானவராய் இருந்தாலும், அவர் உங்களை தொடக்கூடாது.
அது தவிர உங்களை தந்தை, சகோதரன், மாமா, அல்லது ஒன்றுவிட்ட சகோதரன் போன்ற எந்த குடு ம்ப உறுப்பினரும் உங்களின் பிறப்புறுப்பையோ, அல்லது உடலின் வேறு எந்த பாகத் தையோ, காம உணர்வோ டு தொ டக்கூடாது. அப்படி யாரேனும் தொட்டால், உடனே நீங்கள் உதவி நாட வேண்டும். வெளியே சொ ன்னால் உனக்கு ஆபத்து என்று தொட்டவர் பயமுறு த்தினால் கூட, நீங்கள் நம் பும் ஒருவரிடம், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சொல்ல வே ண்டும். இந்த விப ரத்தை உங்கள் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒருவரிடம் சொன்னால், இன்னமும் நல்லது.

Friday, November 14, 2014

ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்!!!

தவறான விளம்பரங்கள் –
லேகிய சித்தர்களும், மூலம் பவுத்திர விற்பனை மருத்துவர்களும் பெரும்பாலும் குறிவைப்பது ஆண்களை தான். இயல்பாக இருக்கும் ஆண்குறியின் தன்மைகளையே நோயாக உருவம் செய்து மிரட்டுகின்றார்கள். இந்த தவறான விளம்பரங்களை படித்து பல முறை நான் அதிர்ச்சி அடைந்திருக்கின்றேன். ஏனென்றால் நான் தேடல் மூலமே கலவி பற்றி அறிந்து கொண்டவன். எனக்கு தெரிந்த அளவுக்கே அவர்கள் கூறுவது எத்தனை பெரிய பொய் என தெரியும். படித்த மருத்துவர்கள் எப்படி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கின்றார்கள் என தெரியவில்லை.
அறிவு –
மற்ற மதங்கள் எல்லாம் கலவியை இறைக்கு அப்பாற்பட்டே பார்க்கின்றன. இந்து மதம் மட்டும் தான் அதையும் இறையோடு சேர்த்தது. கடவுளுக்கு உருவம் கொடுத்து அவருக்கு திருமணமும் செய்து வைத்தது. பழைமையான கோயில் கோபுரங்களை நன்றாக உற்று நோக்குங்கள். அங்கே கலவி பாடமாக சிற்பங்கள் இருக்கும். ஆயிரமாயிரம் சிலைகளினுள்ளே அதை தேடுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் படியாய் செய்திருப்பார்கள் வல்லுனர்கள். வாஸ்தனையார் முதல் நாராயணரெட்டி வரை எல்லா அறிஞர்களும் அங்கே தான் வியந்துபோகின்றார்கள்.
மூடநம்பிக்கைகள் –
90% மூட நம்பிக்கைகள் ஆண்குறி சார்ந்தவையாக இருக்கின்றன என்கிறார் மாத்ரூ.
1. ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.
2. விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.
3. இரும்புமாதிரி இருக்க வேண்டும்.
4. விரைகள் சமமாக இருக்க வேண்டும்.
5. ஒரு சொட்டு விந்து 40 – 100 சொட்டு ரத்தத்திற்கு சமம்.
6. சுயஇன்பம் செய்தால் ஆண்மை போய்விடும்.
7. இரவில் உறங்கும் போது விந்து வெளிப்பட்டால். அது பெரும் நோய்.
8. ஆண் எந்நேரமும் செக்ஸிக்கு தயாராக இருப்பான்.
9. எத்தனை பெண்களை வேண்டுமானாலும் அவனால் ஒரே நேரத்தில் புணர முடியும்.
10. ஆண்தான் பெண்ணின் சுகத்திற்கு முழு பொறுப்பு.
11. முதல் முறையிலேயே அவன் பெண்ணை உச்சத்திற்கு கொண்டுபோய் விடுவான்.
12. திருமணத்திற்கு முன் விந்து வெளியேறிவிட்டால் அவ்வளவுதான். அவனுக்கு ஆண்மை போய்விடும்.
என்ன 12 மூடநம்பிக்கைகளைப் பற்றியும் படித்துவிட்டீர்களா. சரி இந்த 12 ம் தவறென்றால் எது உண்மை என அறியும் ஆவல் ஏற்பட்டால் கீழே செல்லுங்கள்.
விளக்கங்கள் –
1. ஆணுறுப்பின் அளவிற்கும் களவிக்கும் சம்மந்தமில்லை. இரண்டு இன்ச் அளவு பெண்ணுறுப்பிற்குள் அது சென்றுவிட்டாலே விந்தனு நீந்திச் சென்று அண்டத்தினை அடைந்துவிடும்.
2. விரைப்பு என்பது ரத்தநாளங்களின் மூலமாக ஆணுறுப்பினால் ஏற்படுகின்றது. போதுமான இச்சைக்கு ஆண் ஆட்படும் போது தான் இது நிகழும்.
3. ஆணுறுப்பு எலும்பினால் ஆனாது அல்ல. மெல்லிய தசைகளால் ஆனாது , அப்படியிருக்க எப்படி இரும்பாக மாறும்.
4. விரைகள் சமமாக இருந்தால்தான் பிரட்சனை. பெரும்பாலும் இடது விரையானது சற்று கீழே காணப்படும். இதன் அறிவியல் காரணம் இரண்டு விரைகளும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் விபத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே.
5. ஒரு முறை விந்து வெளியேற்றப்படும் போது நீங்கள் சாதாரணமாக எச்சில் துப்பினால் எவ்வளவு சக்தி உடல் இழக்குமோ அவ்வளவு தான். இது மிகவும் சின்ன விசயம்.
6. சுயஇன்பம் செய்வதால் ஆண்மையெல்லாம் போகாது. அதிகமாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால்தான் பிரட்சனை. (பெண்களும் சுய இன்பம் செய்கின்றார்கள் என ஒத்துக்கொள்கின்றார் மாத்ரூ)
7. சுயஇன்பம் செய்து வெளியேற்றாவிட்டால் நடக்கும் இயற்கை நிகழ்வு இது. உங்கள் வீட்டில் மோட்டார் போட்டு தண்ணிரை தொட்டிக்கு அனுப்புகிறீர்கள். தண்ணிர் தொட்டி நிரம்பியபின் வழிந்தால், அதை தவறு என்பீர்களா. உங்களுக்கு பதில் விந்தை இயற்கையே வெளியேற்றி விடுகிறது. அவ்வளவுதான்.
8. உணர்ச்சிகள் உள்ளவன் தானே மனிதன். அவனுக்கு எல்லா வகையான உணர்வுகளும் தோன்றும். காமமும் இயல்பான உணர்ச்சி. எல்லா நேரங்களிலும் கோபம் வருமா. வராது அது போல தான் காமமும்.
9. இப்படியெல்லாம் கதைகள் தான் சொல்ல முடியும்.உண்மையில் நடக்காத காரியம் இது.
10. செக்ஸ் ஆண்,பெண் இருவரும் சேர்ந்து செய்கின்ற செயல். ஒருவருடைய பங்கில்லாமல் மற்றவர்களால் திருப்தி அடைய இயலாது.
11. சித்திரமும் கைப்பழக்கம் என்று சொல்வார்கள். பழக பழக எல்லாம் சரியாகும். முதல் முறையில் மோகம் வேண்டுமானால் தனியலாம் என்கிறார் மாத்ரூ.
12. திருமணத்திற்கு முன் செய்யும் செயலால் ஆண்மை போய்விடும் என்றால், திருமணத்திற்கு பிறகு செய்தாலும் போய்விடும் அல்லாவா.
எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள். வடிவேலுவின் பாணியில் ரூம் போட்டு யோசிக்கராங்களோ என்று கேட்டால். ஆமாம் தொலைக்காட்சிகளில் அப்படிதான் சொல்லுகிறார்கள். உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்திருக்கலாம், இல்லை அவசியமற்றதாய் இருந்திருக்கலாம். தேடி வரும் சிலருக்காக என்னால் முடிந்தது இதுதான்.
https://sagotharan.wordpress.com/

Wednesday, November 12, 2014

"வெற்றி பெற சுலபமான வழிகள்"

நேரத்தை நன்றாகத் திட்டமிட்டுச் செலவு செய்ய, அப்படிச் செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கின்ற முத்தான வழிகள் :
*ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்: சமீப காலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது அடிப்படையில், அறிவியல்ரீதியாகப் பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவது/ மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது.
*முக்கியத்துவம் வாய்ந்த செயல்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்: ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைக்கப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டடத்தைவிட்டு வெளியேறுவதை விட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்க வேண்டுமென்பது முக்கியமானதல்ல !
*உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் மிக அவசியம். அதனால், புதிய யுக்திகளைக் கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையே நல்ல காற்றைச் சுவாசித்துக் காலார நடந்துவிட்டு வாருங்கள் !
*தேவையில்லாதபோது இணையம்/ செல்பேசியை அணைத்து விடுங்கள்: இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதிலுமே காலத்தைக் கழிக்க வேண்டாம்: இரண்டையும் தேவையில்லாத செயல்களில் அணைத்துவிடுவது நலம் பயக்கும்.
*முடியாது என்பதைக் கனிவாகச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் : நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, களைப்பைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை எனச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் நேரத்தைச் சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்.
*காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்சி செய்யுங்கள் : ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்குமுன் திக்ரு செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்.
*போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் : ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணிநேரம். உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையைக் குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலை செய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்று கூறுகிறது உளவியல்.
*எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் : உங்கள் அறையைக் குப்பையாக்கிவிட்டு விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்குப் பதிலாகக் குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்து விட்டால், குப்பையைச் சுத்தம் செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்.
*மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தைத் திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள் : மின்னஞ்சல்களைத் தினசரி சரியாகத் திட்டமிட்டுத் தக்க நேரத்தில் கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதே மாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களைப் பார்க்காதீர் அது கவனச்சிதறலை ஏற்படுத்தும்.
*செயல்பட அதிக நேரம் இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள்: ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும் பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நாம் எப்போதும் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டால் மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துவிடும். வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே.
http://vienarcud.blogspot.com/

Thursday, November 6, 2014

காளான் வளர்ப்பீர்! கை நிறைய சம்பாதிப்பீர்- வழிகாட்டும் அருள் தாமஸ் !!!!

சித்திர சேனன்

காளான், இது மிகச்சிறந்த ஊட்டச்சத்துள்ள சைவ உணவாகும். இந்தக் காளான்களில் இயற்கையாக விளையக் கூடிய காளான்கள் பல உண்டு என்றாலும் இதில் ஒரு சில காளான்களை மட்டுமே உணவாக உண்ண முடியும். ஆனால் செயற்கையாக விளைவிக்கக் கூடிய காளான்கள் அனைத்தையும் உணவாக உட்கொள்ளலாம். செயற்கையாக விளைவிக்கக் கூடிய காளான்களில் சிப்பிக் காளானும், பால் காளானும் அதிகம் விரும்பி உண்ணக் கூடிய உணவாகும்.
தமிழ் நாட்டில் பல இடங்களில் காளான் வளர்ப்புப் பற்றி பயிற்சி வகுப்புகளை நிகழ்த்தி வருகிறார் அருள்தாமஸ் என்பவர். இவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காளையார் கோவில் என்ற இடத்தில் “ காளான் வளர்ப்பு மற்றும் விதை தயாரிப்பு ஆய்வுக் கூடம்” என்று ஒரு கூடத்தை நிறுவி செயல்பட்டு வருகிறார்.
இக்கூடத்தில் காளான் விதைகளைத் தயாரிக்கிறார். தவிர இம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு காளான் வளர்ப்பு பற்றி ஒருநாள் பயிற்சி வகுப்பு எடுக்கிறார். இதுவரை இவர் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், சென்னை (தாம்பரம், கோயம்பேடு, கிண்டி, செங்குன்றம், புழல்) திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, தேனி, வத்தலக்குண்டு, திண்டுக்கல் எனப் பல பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், பிற குழுக்களுக்கு காளான் வளர்ப்பு பற்றி பயிற்சி அளித்த தோடு அவர்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதற்கான உதவியும் செய்து வருகிறார்.
காளான் வளர்ப்பு பயிற்சியும், கடனும்:
காளான் வளர்ப்பு பயிற்சியானது ஒரு நாள் பயிற்சி வகுப்பாகும், காலை வகுப்பில் கலந்து கொண்டால் மாலையில் வகுப்பு முடித்துவிடும். மாலையில் பயிற்சி பெற்றதிற்கான சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு இத்தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் வாங்க இந்தச் சான்றிதழ் அடிப்படைத் தகுதி பெற்ற ஒன்றாகும்.
காளான் வளர்க்க வங்கியில் கொடுக்கப்படும் கடன் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஆகும்.
ஒரு லட்சம் கடன் வாங்கினால் நாம் வங்கியில் சொத்து மதிப்பு காட்டத் தேவை இல்லை. ஒரு லட்சத்திற்கு மேல் கடன் வாங்கினால் சொத்துக் கணக்கு காட்ட வேண்டும்.
இன்று அனைத்து வங்கிகளிலும் காளான் வளர்ப்பிற்கான கடன் உதவி வழங்கப்படுகிறது.
1 லட்சத்தை 2 வருடத்திற்குள் கட்டி விட வேண்டும் என்பது விதி.
காளான் வளர்ப்பு பற்றி செய்முறை:
காளன் வளர்ப்பதற்குத் தேவையான மூலப் பொருள்களாவன,
வைக்கோல்
காளான் விதை
பிளாஸ்டிக்
செய்முறை:
நன்கு காய்ந்த வைக்கோலைச் சிறு சிறு துண்டுகளாக வைக்கோல் (கட்டிங்) நறுக்கும் இயந்திரத்தின் மூலம் வெட்டிக் கொள்ள வேண்டும். இதனை நன்கு கொதிநீரில் வைத்து அவிக்க வேண்டும். இது முதல் முறையாகும்.
அடுத்ததாக 100 லிட்டர் நீரும் 150 மில்லி லிட்டர் பார்மலினும், 3 கிராம் கார்பன்- டை- ஜம் பொடி இம்மூன்றையும் கலந்த நீரில் வைக்கோலைச் சுமார் 8 மணி நேரம் ஊறவைத்து, இதன் பின்னர் தண்ணீரை வடிகட்டி உலர வைத்து, ஓரளவு ஈரப்பதம் (அதாவது 60%) கையில் பிடிக்கும் போது ஈர உணர்வு இருக்கும் படி வேண்டும். பின்பு 12-24 என்ற அளவுள்ள பாலித்தின் பையில் வைக்கோலை முதலில் 5 செ.மீ. அளவு இட்டு நிரப்ப வேண்டும். பின்பு காளான் விதையை 20 கிராம் எடுத்து நிரப்பப்பட்ட வைக்கோல் மேல் தூவ வேண்டும்.
இது போல் மாறி, மாறி 7 முதல் 8 அடுக்கு போட வேண்டும். பின்பு பக்கவாட்டில் 3 துளைகள் வீதம் நான்கு பக்கத்திலும் 12 துளைகள் போட வேண்டும். இதன் பின் காளான் வளர்ப்புக் கென்று தென்னை ஓலையால் பின்னப்பட்ட குடிலின் மையத்தில் கட்டித் தொங்க வைத்து தினமும் தண்ணீரைத் தரைப் பகுதியில் உள்ள மணலில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்து வந்த 10வது நாளில் காளான் விதைகள், வெள்ளை நிறமாக துளிர் விடுவதைக் காணலாம். பின்பு 27-ஆம் நாளில் காளான் மொட்டுக்கள் இதிலிருந்து தோன்றும். இதை 3 நாட்களில் அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும்.
காளான் விற்பனை:
1 கிலோ காளான் உற்பத்திச் செலவு அதிகபட்சம் 30 ரூபாய் ஆகும்.
1 கிலோ காளான் மொத்த விற்பனைக்கு ரூ.90 முதல் 100 வரை விற்பனை செய்யலாம்.
நேரடியாக நாமே விற்பனை செய்ய ஆகும் செலவு 120 முதல் 150 வரை . 1 கிலோ காளான் இன்று இந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
காளானில் உள்ள சத்துக்கள்:
காளானில் அதிக புரோட்டீன் சத்து உள்ளது. எந்தத் தாவரத்திலும் இல்லாத சத்து இதில் உள்ளது.
தாவர வகைகளிலேயே அதிக புரோட்டீன் சத்து உள்ள ஒரே வகைத் தாவரம் காளான் ஆகும். இதனால் தான் இதன் விலையும் அதிகம்.
காளான் உணவின் மகத்துவங்கள்:
உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும்
நீரழிவு, புற்றுநோய்க்குத் தடுப்பாய் செயல்படும்.
சர்க்கரை நோய்க்குத் தடுப்பாய்ச் செயல்படும்.
இதய நோய்க்குத் தடுப்பாய்ச் செயல்படும்.
ஒட்டு மொத்த நோய் எதிப்புத் தன்மையை உடலுக்குத் தரும்.
இவ்வாறு காளான் வளர்ப்பில் பல நன்மைகளைக் கூறிய அருள்தாமஸ் என்பவர் “ரோபஸ்ட்” என்ற பெயரில் காளான் வளர்ப்பு மற்றும் விதை தயாரிப்பு ஆய்வுக் கூடத்தை நிறுவி, இயங்கி வருவதின் நோக்கம் என்னவெனில்…
ஆரோக்கியமான உணவு மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதல்.
தமிழக உணவுத் தயாரிப்பு தமிழருக்கு மட்டுமின்றி உலகிற்கும்.
விவசாயத் தொழிலை லாபகரமாக்குதல்.
கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு வாழ்வாதாரம் உருவாக்குதல்.
இவரின் அறிமுகத்தில் காளான் உணவு வகைகள்:
காளான் சூப் தயாரிப்பு.
காளான் டின் (உடனே உண்பதற்கேற்ற தயாரிப்பு)
காளான் மசாலா (குழம்பிற்கு)
காளான் கிரேவி
காளான் பிரட், காளான் பிஸ்கெட், காளான் ஊறுகாய்
காளான் கட்லெட், காளான் பக்கோடா
அதிக புரோட்டீன் உள்ள காளான் பானம்
காளான் பிரியாணி
– போன்ற உணவுகளாகும். இந்த உணவுகளை இவர் தயார் செய்து வைத்துள்ளார். இதை தமிழக அரசு உணவு ஆய்வுக்குழுவினருக்கு அனுப்பி அவர்களின் அனுமதி பெற்றபின் இந்த உணவுப் பொருட்கள் எல்லாம் விற்பனைக்கு வரும் என அருள் தாமஸ் தெரிவித்தார்.
இவர் நடத்தி வரும் நிறுவனம் பற்றி மேலும் இவர் கூறியதாவது, எங்கள் நிறுவனமும், சிவகங்கை மாவட்ட வேளாண்மை அமைப்பும் இணைந்து மாவட்டம் முழுவதும் காளான் வளர்ப்பு பற்றிப் பயிற்சி கொடுத்து வருகிறது. அதில் சிறந்த பயிற்சி பெற்ற நபருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, காளான் வளர்ப்புக்கான கடனை வங்கி மூலம் பெற்றுத் தந்து கொண்டிருக்கிறோம். இதுவரை எங்கள் நிறுவனம் மூலம் 30 லட்சம் ரூபாய் வாங்கி பயனாளர்களுக்கு அளித்திருக்கிறோம்.
காளான் வளர்க்கும் விவசாய மக்களுக்கு காளான் விதை, மற்றும் வளர்க்கத் தேவையான அனைத்துப் மூலப்பொருட்களையும் கொடுத்து உதவுகிறோம். இவர்கள் உற்பத்தி செய்த மொத்த காளான்களையும் எங்கள் நிறுவனம் வாங்கிக் கொண்டு அதற்குறிய பணத்தை, விற்பவரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டு வருகிறது. தவிர அனைத்து மாவட்ட மகளிர் குழுக்களுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் எங்கள் நிறுவனம் காளான் வளர்ப்பில் பயிற்சி அளித்து வருகிறது.
அது தவிர கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு குறிப்பாகத் தாவரவியல் படிக்கும் மாணவர்களின் ஆய்வுக்கு உதவி செய்து வருகிறோம். காளான் வளர்ப்பு பற்றியும் அறிவுரை வழங்கி வருகிறோம்.
இதைத் தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் பயிற்சி அளித்து பலருக்கும் வழிகாட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறேன். இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். நலிந்த கொண்டிருக்கும் விவசாயத்தை லாபமான தொழிலாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியும், அதற்காகத் தீவிரமாக உழைத்தும் வருகிறேன். வெளிநாடுகளில் காளான் ஏற்றுமதி செய்ய மாதம் 1000 கிலோ தேவை இருக்கிறது. அதனை எட்டிவிட வேண்டும் என்ற முனைப்போடும் செயல்பட்டு வருகிறேன்.
இவ்வாறு சிறகு இணைய இதழுக்காக (siragu.com) தம் தொழில் பற்றிப் பேசிய இந்த இளைஞனின் கனவு பலிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறென்ன நமக்கு ஆசை இருக்கப் போகிறது?
மேலும் தொடர்புக்கு – அருள் தாமஸ் – 91- 98411 31674 , 91- 97898 41458
http://siragu.com/

Wednesday, November 5, 2014

பால் தினசரி ரூ. 7,500... மண்புழு தினசரி ரூ.7,000...

“மதிப்பு கூடும் மாட்டுப் பண்ணை..!”
68 வயதிலும் அசத்தும் விவசாயி!
ஜி. பழனிச்சாமி படங்கள்: தி.விஜய்
மாத்தி யோசி
‘மகசூல் எடு... கேட்ட விலைக்குக் கொடு... வந்தது வரவு... சென்றது செலவு’ என்கிற கதையாகத்தான் போய் கொண்டிருக்கிறது, விவசாயிகள் வாழ்க்கை. பெரும்பான்மையான விவசாயிகள் விற்பனை வாய்ப்பு பற்றி யோசிப்பதே இல்லை. இந்த விஷயத்தில் கொஞ்சம் மெனக்கெட்டால் கூடுதல் வருமானம் பார்க்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்... திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், எல்லப்பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.பி. சுப்பிரமணியன். 68 வயது இளைஞரான இவர், சுறுசுறுப்பாக 35 ஏக்கரில் விவசாயம் செய்வதோடு, பால் பண்ணையையும் நடத்தி வருகிறார். உற்பத்தி செய்யும் பாலை கேன் மற்றும் பாக்கெட்களில் அடைத்து, நேரடி விற்பனை செய்து வருகிறார்.
கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பல ஏக்கரில் விரிந்து கிடக்கும் வேலி அடைத்த மேய்ச்சல் நிலங்கள், இடையிடையே சில தோட்டங்கள் எனக் காட்சி அளிக்கிறது, எல்லப்பாளையம்புதூர். வளைந்து வளைந்து செல்லும் தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கிறது, சுப்பிரமணியனின் தோட்டம். வேம்பு, கருவேல், பூவரசு என நிழல் பரப்பி நிற்கின்றன, வகைவகையான மரங்கள். அங்கிருந்த கொட்டகையில் தகுந்த இடைவெளியில் எதிரெதிர் வரிசையில் அசைபோட்டு படுத்திருந்தன, பசு மாடு கள். பசுந்தீவன வயல்கள், அவற்றை பொடிப்பொடியாய் நறுக்கும் இயந்திரம், அடுக்கி வைக்கப்பட்ட அடர்தீவன மூட்டைகள், காற்றோட்டமான இடத்தில் போடப்பட்டிருக்கும் சோளத்தட்டைப் போர்கள், நீண்டு கிடக்கும் மண்புழு உர உற்பத்திப் பந்தல்கள் என இருக்க... வேலையாட்கள் அவர்களுக்கான பணிகளில் மும்முரமாக இருந்தனர். சுப்பிரமணியனிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், வேலையாட்களுக்கு பணிகளைச் சொல்லி விட்டு நம்முடன் பேச ஆரம்பித்தார்.
விதைச்சவனுக்கு நஷ்டம்... விக்கிறவனுக்கு லாபம்!
‘‘பாட்டன் பூட்டன் காலந்தொட்டு பரம்பரையா இந்த ஊர்லதான் இருக்கோம். விவசாய நெலம், மேய்ச்சல் காடுனு இங்க 35 ஏக்கர் இருக்கு. 50 வருஷத்துக்கு முந்தியே மெட்ராஸ் அனுப்பி, படிக்க வைக்கிற அளவுக்கு செல்வாக்கான குடும்பம். பச்சையப்பன் காலேஜ்ல ஏம்.ஏ. எக்னாமிக்ஸ் படிச்சேன். அப்போலாம், அரசாங்க வேலை ஈஸியா கிடைக்கும்னாலும், வேலைக்கு முயற்சி செய்யாம அப்பாவுக்குத் துணையா விவசாயத்துல இறங்கிட்டேன். அப்போ, இந்தப்பகுதியில புகையிலை வெவசாயம்தான் பிரதானம். அதனால புகையிலை பதப்படுத்துற தொழிலையும் செஞ்சேன். பொருளாதாரம் படிச்சிருந்ததால, அப்பப்போ விவசாயிகளோட வருமானத்தைப் பத்தி யோசிச்சுப் பார்ப்பேன். வெதைச்சவன் நஷ்டப்படுறான். ஆனா, வாங்கி விக்கிறவன் நல்ல லாபம் பார்க்கிறான். மத்த பொருளை உற்பத்தி பண்றவங்களுக்கு இந்த நிலைமை கிடையாது. விவசாயத்துல மட்டும்தான் இந்த முரண்பாடு. இதை மாத்தி விவசாயியே லாபம் எடுக்க என்ன வழினு யோசிச்சுட்டே இருப்பேன்” என்ற சுப்பிரமணியன் சற்று இடைவெளிவிட்டு, தொடர்ந்தார்.
மதிப்புக்கூட்டினா, கூடும் மதிப்பு!
“இந்த நிலையில, விவசாயிகள் கூட்டம் ஒண்ணுல கலந்துக்குறதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா, ‘விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கிற பொருள்ல, 30 சதவிகிதத்தையாவது மதிப்புக்கூட்டி விற்பனை செய்யணும். அப்போதான், கட்டுப்படியாகிற விலை கிடைக்கும். பல வெளிநாடுகளுக்குப் போய் பார்த்து வந்தவன்ற முறையில் உங்ககிட்ட இதைச் சொல்றேன்’னு அந்தக் கூட்டத்துல பேசினார். அந்தப் பேச்சுதான் எனக்குள்ள ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துச்சு. அதுக்குப்பிறகு, புகையிலைத் தொழில்ல பல யுக்திகளைக் கொண்டு வந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்னு ஏற்றுமதி பண்ண ஆரம்பிசேன். இந்த நிலையில எனக்கு கல்யாணம் ஆச்சு. மனைவி பேரு ரங்கநாயகி. சட்டம் படிச்சவர். சுதந்திரப் போராட்ட வீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு புகையிலை சம்பந்தமான தொழில் செய்றது பிடிக்கல. அதனால, புகையிலை குடோனை மூடிட்டு, ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, பவர்லூம்னு தொழில் களோட விவசாயத்தையும் பாக்க ஆரம்பிச் சோம்.
ரெண்டு பொண்ணு, ஒரு பையன்னு மொத்தம் மூணு வாரிசுங்க. கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் வெளியூர்ல இருக்காங்க. ‘இந்த வயசுல ஏம்ப்பா கஷ்டப்படுறீங்க.. சும்மா ஓய்வெடுங்க’னு அன்புக் கட்டளை போடுறாங்க பிள்ளைங்க. ஆனா, ‘யாரு சும்மா இருந்தாலும், தப்பில்லை. ஒரு விவசாயி சும்மா இருக்கக்கூடாது’ங்கிறதுல உறுதியா இருக்கிறவன் நான். அதனாலதான் இந்த 68 வயசிலும் மாட்டுப் பண்ணை வெச்சு பால் சப்ளை பண்ணிட்டு இருக்கேன்’’ என்ற சுப்பிரமணியன், அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
மொத்தம் 35... கறவை 25!
“மொத்தம் 35 கலப்பினப் பசுக்கள் இருக்கு. இதுல 25 உருப்படி கறந்துட்டு இருக்குது. மீதி சினையா இருக்கு. கன்னுக்குட்டி குடிச்சது போக, சராசரியா ஒரு மாட்டுல இருந்து 10 லிட்டர் பால் கிடைக்கும்.
25 மாடுகள் மூலமா தினமும் 250 லிட்டர் பால் கிடைக்குது. ரெண்டு வருஷமா இந்தப் பகுதியில கடுமையான வறட்சி. மேய்ச்சல் நிலம் எல்லாம் காஞ்சு கருகிப்போச்சு. தண்ணீர் பற்றாக்குறையால பசுந்தீவன உற்பத்தியும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. பசுந்தீவனத்தையும், மக்காச்சோளத் தட்டையும் விலைக்கு வாங்கி் போட்டும் கட்டுபடியாகல. அதனால, பால் உற்பத்தி குறைவாதான் இருக்கு. இந்த வருஷம் பருவமழை பரவாயில்ல. அதனால, தீவனத்துக்குப் பஞ்சம் இருக்காதுனு நினைக்கிறேன். பாலை, திருப்பூருக்கு அனுப்பி, ஆட்கள் மூலமா நேரடியா விநியோகம் பண்றேன். கெட்டியாவும், சுவையாவும் இருக்குறதால, எங்க பண்ணை பாலுக்கு ரெகுலர் வாடிக்கையாளர்கள் இருக்காங்க. சில ஓட்டல்கள்லயும் ரெகுலரா வாங்குறாங்க.
இனிக்கும் இயற்கைப் பால்!
இப்போ இயற்கை அங்காடிகள் பெருகுறதால ‘இயற்கைப் பால்’ உற்பத்தி பண்ணலாம்னு யோசிச்சு... பண்ணையில அஞ்சு மாடுகளை தனியா பிரிச்சோம். அந்த மாடுகளை பகல்ல மரத்தடி நிழல்ல கட்டி தீனி போட்டு, ராத்திரிக்கு மட்டும் தனி தொழுவத்துல அடைக்கிறோம். அந்த மாடுகளுக்கு மட்டும் எங்க தோட்டத்துல இயற்கை முறையில விளைவிச்ச பசுந்தீவனம், மக்காச்சோளத்தட்டை, இயற்கை அரிசி உற்பத்தி செய்ற விவசாயிகள்கிட்ட இருந்து வாங்கின தவிடு, இயற்கையில விளைஞ்ச தேங்காய்் பிண்ணாக்குனு எல்லாமே இயற்கைப் பொருட்களா கொடுக்குறோம். அந்த மாடுகள்ல இருந்து கிடைக்கிற 50 லிட்டர் பாலை ஒரு லிட்டர் அளவுல பாக்கெட்கள்ல அடைச்சு, திருப்பூர்ல பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்துற என்னோட மகன் குகனுக்கு அனுப்பிடுவேன். என், மருமகள் வித்யாவுக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வம் அதிகம். அவங்கதான் இந்த 50 லிட்டர் இயற்கைப் பாலை விற்பனை செய்றாங்க. வாங்கி பயன்படுத்தறவங்க எல்லாரும் ரொம்ப நல்லா இருக்குனு சொல்றாங்க. இதுல முக்கியமான விஷயம்... இயற்கை பால்ங்கிறதுக்காக அதிக விலைக்கு விற்பனை செய்றதில்லை. நமக்கு விலை முக்கியமில்லை. விழிப்பு உணர்வு பெருகணுங்கிறதுதான் முக்கியம். அதனால, வழக்கமான பால் விலைக்குதான் கொடுக்குறோம்.
லாபம் குறைவு... மனம் நிறைவு!
நாளுக்கு நாள் பசுமாடு வளப்புக்கான உற்பத்திச் செலவு கூடிட்டே போகுது. இன்னிக்கு நிலைமைக்கு ஒரு நாளைக்கு ஒரு பசுவுக்கு சராசரியா 205 ரூபாய் செலவாகுது. டெலிவரி செலவு, லிட்டருக்கு 3 ரூபாய். லிட்டர் 30 ரூபாய்னு விற்பனை செய்றோம். ஆக, 10 லிட்டர் கறக்கிற ஒரு மாட்டுல இருந்து ஒரு நாள் லாபம் 65 ரூபாய் கிடைக்குது. 25 மாடுகள் மூலம் ஒரு நாளைக்கு எங்களுக்கு கிடைக்கிற வருமானம் 1,625 ரூபாய்தான். இதுல ஆரம்பகட்ட செலவுகள் தனி. பண்ணை ஆரம்பிச்சு எட்டு வருஷம் ஆனதால, அதையெல்லாம் இப்போ கணக்குல கொண்டு வரல. அந்தச் செலவுகளை ஒன்றரை வருஷத்துலேயே எடுத்துட்டேன். பொருளாதாரம் படிச்ச எனக்கும், சட்டம் படிச்ச என் மனைவிக்கும் ஏற்ற வருமானம் இல்லைனாலும், பணநிறைவை விட மனநிறைவோட, சொந்த மண்ல இருக்குற மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடில்லை.
அதேசமயம், பால் பண்ணை வெச்சா லாபம் கிடைக்காதுனு நினைச்சுடாதீங்க. பால் பண்ணையை மட்டும் வெச்சு, தேமேனு இருந்தா குறைவான லாபம்தான் வரும். பால் பண்ணை தொடர்பான உபதொழில்களையும் செய்யணும். இதைத்தான் நான் செய்துட்டிருக் கேன். குறிப்பா மண்புழு உரம் தயாரிக்க ஆரம்பிச்சேன். 15 ஆயிரம் சதுர அடியில பெட் அமைச்சு நிழல்வலை போட்டு, சாணம் மூலமா... சுழற்சி முறையில, ஒரு நாளுக்கு ஒரு டன் மண்புழு உரம் உற்பத்தி செய்றோம். இது செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரங்கிறதால, கிலோ 7 ரூபாய்னு விற்பனை செய்றேன். இதன் மூலமா ஒரு நாளைக்கு 7 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. இதுல 3 ஆயிரத்து 500 ரூபாய் உற்பத்திச் செலவு போக தினசரி லாபம் 3 ஆயிரத்து 500 ரூபாய்” என்ற சுப்பிரமணியன், நிறைவாக, பால் மட்டும் போதாது!
‘‘ஆக, வெறுமனே பால் மட்டும் உற்பத்திப் பண்ணினா, நிரந்தர வருமானமும் கிடைக்காது... லாபமும் இருக்காது. பால், சாணம், மூத்திரம் எல்லாத்தையும் பயன்படுத்தி பலவகையான பொருட்களை தயாரிச்சு விற்பனை செய்தால்தான் லாபம் பார்க்க முடியும். நாங்க பாலை மட்டும் வித்தப்போ, மாசம் 45 ஆயிரம் ரூபாய்தான் லாபம் பார்த்தோம். ஆனா, மண்புழு உரம் தயார் செஞ்சு விற்பனை செய்ய ஆரம்பிச்ச பிறகு, மாசம் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. அதனால, உப தொழில்களையும் சேர்த்து செஞ்சா நிச்சயம் லாபம் கிடைக்கும்’’ என்று சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு,
கே.பி. சுப்பிரமணியன்,
செல்போன்: 99944-49696.
செழிப்பு தரும் செரிவூட்டப்பட்ட மண்புழு உரம்!
தற்போது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது, செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரம். இதன் தயாரிப்புத் தொழில்நுட்பத்தை சுப்பிரமணியனுக்குச் சொல்லித் தந்தவர், பேராசிரியர் விவேகானந்தன். அவரிடம் இதுபற்றி கேட்டபோது, “செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரம் என்பது, பல நுண்ணுயிரிக் கரைசல்களை சாணத்துடன் கலந்து, செரிவூட்டி மண்புழு உரமாக மாற்றுவது. ஒரு டன் சாணத்தை மண்புழு ‘பெட்’டில் பரப்பி, அதன் மீது... தலா 200 மில்லி அசோஸ்பைரில்லம், அசிட்டோஃபேக்டர், சூடோமோனோபாஸ், பாஸ்போ - பாக்டீரியா மற்றும் பேசிலஸ் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும்.
இதனால், பெட்டில் பல மடங்கு நுண்ணுயிரிகள் பெருகுவதால்... மண்புழுக்களில் இருந்து நுண்ணுயிரிகளுக்கும், நுண்ணுயிரிகளில் இருந்து, மண்புழுக்களுக்கும் ஊட்டம் மாறி மாறிச் செல்லும். இதனால் கிடைக்கும் மண்புழு உரம், நுண்ணுயிரிகளின் செரிவூட்டப்பட்ட கலவையாக மாறிவிடுகிறது. இதைப் பயன்படுத்தும்போது ஆரோக்கியமான விளைச்சல் கிடைக்கிறது’’ என்றார்.
நன்றி :-http://www.vikatan.com/